சாத்தான்குளம் அருகே தலைமை ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஆர். எஸ்தர் மெர்சி, கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பணிகளைப் பாராட்டி நடப்பாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாநில அளவிலான இந்த உயரிய விருதைப் பெற்று திங்கட்கிழமை தனது பள்ளியான புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குத் திரும்பிய தலைமை ஆசிரியர் எஸ்தர் மெர்சிக்கு பள்ளி வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்களது தலைமை ஆசிரியர் மாநில நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்குத் திரும்பியதை அறிந்த மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் அவரை வாழ்த்தி பாராட்டினர். தங்களது பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்ற இந்த உயரிய விருது, மாணவர்களிடைய...