Posts

Showing posts from August, 2017

6029 கணினி அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அமைச்சர் தகவல்

 தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  பேசியபோது:   தமிழகத்தில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் வகுப்பறைகளிலேயே உதவி கல்வி அலுவலர்களுக்கு அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வெளிப்படையாக விரைவில் நடத்தப்படும். மேலும் கல்வி அலுவலர்களுக்குபுதிய வாகனங்கள் வழங்கப்படும். மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்கள் சுலபமாக தெரிந்துகொள்ள ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

DRIVING LICENSE காணாமல் இந்த இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.‌

GST EFFECT ON COMMON MAN IN SATHANKULAM

Image
BILL OF SWEETS STALL

திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் 1-21 வரை கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம்

Image

சாத்தான்குளம் வட்டார கபடி வீரர்கள் தேர்வு

சாத்தான்குளம்:தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஜூனியர் பிரிவு கபடி வீரர்கள் தேர்வு aசெய்யும் நிகழ்ச்சி சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.  இதில் சாத்தான்குளம் யூனியன் அளவிலான கபடி அணி வீரர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தேர்வு செய்யும் பணியை மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் மகாபால்துரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் அனைவரும் கபடி விளையாடினர். இதில் 14 கபடி அணி வீரர்கள் தேர்வு செய்தனர்.     வீரர்களை சாத்தான்குளம் வட்டார அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் சாமுவேல் பொன்னையா, முத்தரசன் ஆகியோர் தேர்வு செய்தனர்.    பொத்தகாலன்விளை உடற்கல்வி ஆசிரியர் நெல்சன் சத்தியராஜ், ஜெயபால், ஆண்ட்ரூஸ் அண்ணாதுரை, மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    இதையடுத்து ஜூனியர் பிரிவு கபடி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வட்டார அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் தெரிவ...

PAN எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு டிச.,31 வரை நீடிப்பு

டெல்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான காலக்கெடு ஆகஸட் 31 அதாவது இன்று தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017- 18-ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும். ஆதார் - பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. www.incometax , indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் - பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

நாளை முதல் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் விநியோகம்

ரேசன் கடைகளில் நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அதாவது ஸ்மார்ட் கார்டு பெற்றவர்களுக்கு, கார்டு மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல மற்றும் தாலுகா அலுவலகங்கள் மூலம், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஸ்மார்ட் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கம் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நாளை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஸ்மார்ட் பெற்றவர்களுக்கு, அதன் மூலம் மட்டுமே...

நெல்லையில் நாளை : அம்மா திட்ட முகாம்

Image

GENERAL KNOWLEDGE QUESTIONS FOR TNPSC & TET EXAMS - DINAMANI NEWSPAPER - PDF FORMAT

click here for general knowledge

முதல் அட்டெம்டிலேயே குரூப் 1 தேர்வில் வென்ற தூத்துக்குடி - கோவில்பட்டி மாணவர்

Image

திருநெல்வேலி மாநகராட்சியில் 4 நாட்களுக்கு வரி வசூல் மையங்கள் & சேவை மையங்கள் இயங்காது

Image

பிளாஸ்டிக்கில் இருந்து ‘தின்னர்’ என்னும் பொருள் கண்டறிந்து கடையநல்லூர் மாணவர் சாதனை

Image

வேலையிழந்த டாஸ்மாக்டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் மாற்றுப் பணி: விண்ணப்பம் பெறுவது தொடக்கம்

3,300 காலியிடங்கள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் மாற்றுப் பணி: விண்ணப்பம் பெறுவது தொடக்கம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களில், மாற்றுப் பணி வழங்கப்பட உள்ளது. இதற்காக டாஸ்மாக் ஊழியர்களிடம் விண்ணப்பங்களை வாங்கும் பணியை தொடங்கியுள்ளது டாஸ்மாக் நிறுவனம்.உச்ச நீதிமன்ற உத்தரவால் நெடுஞ்சாலைகள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டதால், வேலையிழந்த டாஸ்மாக் ஊழியர்கள் அரசின் பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதனிடையே, மூடப்பட்ட கடைகளில் 1,183 டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றி திறக்கப்பட்டு, அந்தந்தக் கடைகளில் ஏற்கெனவே பணியாற்றியவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. பின்னர், வேலையிழந்த ஊழியர்கள் அனைவரும் செயல்பாட்டில் இருந்து வரும் டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதனால், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3,300 காலியிடங்கள் இந்நிலையில்...

'ஆதார் - பான்' இணைக்க நாளை கடைசி நாள்

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், 'ஆதார்' எண்ணை, 'பான் கார்டு' எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், 'பான்' எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும் என,மத்திய அரசு உத்தரவிட்டது.வருமான வரி இணையதளத்தில், அதற்கான வசதிகள் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில், ஏராளமானோர் இணைக்க முயன்றபோது, இணையதளம் முடங்கியது. அதனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான, ஜூலை, 31க்குள், பலர் அதை செய்ய முடியவில்லை.அதைத் தொடர்ந்து, இரு எண்களையும் இணைப்பதற்கான அவகாசம், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அது, நாளையுடன் நிறைவடைகிறது. அதன்பின், வருமான வரி கணக்குதாக்கல் செய்ய முடியாது. என்ன செய்யலாம்? :   CLICK THIS LINK TO JOIN AADHAR WITH PAN CARD   இதுபோல், மொபைல் போனில், UIDPAN என முதலில், 'டைப்' செய்து, சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு, பான் எண் ஆகியவற்றை, 'டைப்' செய்து, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், இண...

SSLC & HSC SEPTEMBER/OCTOBER MONTH EXAM ANNOUNCED

DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 1.DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.  DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 1.DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. FOR ALL DETAILS - CLICK HERE  

12 ஆம் வகுப்பு கடந்த வருடம் படித்த மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க தடை நீங்கியது

  தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் , பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது. 2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரென நிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

JOB OPPORTUNITY IN CHENNAI METRO

Image

PERMENANT PROFESSORS (14), ASSOCIATE PROFESSORS (13) VACANCY IN RAJIV GANDHI UNIVERSITY

Image

PERMANENT ASSISTANT PROFEESOR VACANCY IN TIRUNELVELI DISTRICT

Image

PERMANENT TEACHER POST IN THOOTHUKUDI DISTRICT" B.T TEACHER POST

Image

பொறியியல் மாணவர்களின் திறன் மேம்படுத்த கருத்தரங்கம்

Image

பெரியார் பல்கலையில் பட்டமளிப்பு விழா

Image

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை பத்திரமாக வைக்க வேண்டியதன் அவசியம்

Image

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான இ-மெயில் சேவை: மத்திய அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மின்னஞ்சல் (இ-மெயில்) சேவையை வழங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மின்னஞ்சல் கொள்கையின்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தேசிய தகவலியல் மையத்தின் மூலம் பாதுகாப்பான மின்னஞ்சல் ஐ.டி. வழங்கப்படும். @gov.in என்ற டொமைனில் இந்த சேவை வழங்கப்படும். இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள சர்வர்களால் அரசின் தரவுகள் சட்டவிரோதமாக திருடப்படுவதைத் தடுப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். நாடு முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருப்பதால், இது மிகப்பெரிய இ-மெயில் சேவையாக இருக்கும். இதன்மூலம் அரசு தரவுகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கும். இதனால் அரசின் செயல்பாடு அதிகரிப்பதுடன், அனைத்து தகவல் தொடர்பும் மின்னஞ்சல் மூலமே நடைபெறும். இதனால் காகிதமில்லா நிர்வாகத்தை நோக்கி நகர முடியும். இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக சில துறைகளில் இந்த சேவை ஏற்கெனவே தொடங்...

பழனியப்பபுரம்- சின்னமாடன் குடியிருப்பு ரோடு வழியாக பயணம் செய்த தம்பதியினரிடம் வழிப்பறி

நாசரேத் அருகே கணவருடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம் நகை பறிப்பு நாசரேத்: நாசரேத் அருகே கணவருடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம்  நகை மற்றும் பொருட்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவைகுண்டம்  தெற்கு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி அலிஷ்மேரி (43).    நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் தனியார் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தம்பதியர் தங்களுக்கு சொந்தமாக மூன்றடைப்பு அடுத்த பாணாங்குளத்தில்  உள்ள வீட்டை நேற்று முன்தினம் பார்வையிட பைக்கில் சென்றனர். பின்னர் இரவு 7.30 மணி அளவில் நாசரேத் அருகேயுள்ள  பழனியப்பபுரம்- சின்னமாடன் குடியிருப்பு ரோடு வழியாக மீண்டும் திருவைகுண்டத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து  வந்த மர்ம நபர்கள் இருவரும், ராமகிருஷ்ணன் பைக்கை முந்திச் சென்று மறித்தனர்.  பின்னர் அவதூறாக பேசிய அவர்கள்,  அலிஷ்மேரியின் கழுத்தை  நெரித்ததோடு அதில் கிடந்த 9 பவுன் நகை மற்றும் செல்போன், ஏடிஎம்...

இரயில்வேத்துறையில் சீர்திருத்தம் இன்னும் எவ்வளவோ தேவை. - அனுபவக் கட்டுரை

Image
நேற்று (27.08.2017) கொடை ரோட்டில் இருந்து நாசரேத்துக்கு பாசஞ்சர் ட்ரெயினில் பயணம் செய்ய நேரிட்டது. அந்த பயணம் இரயில்வேத்துறையில் இன்னும் எவ்வளவு சீர்திருத்தம் தேவை என்பதை வெளிக்காட்டியது. நீங்களும் என் கருத்தோடு ஒத்துப்போவீர்கள் என்று நம்புகிறேன். சுதந்திரம் அடைந்து இத்தனை வருடம் கழித்தபின்னும் இன்னும் நாம் முன்னேற வேண்டியது எவ்வளவோ தூரம். சுமார் 5 மணி நேரத்தில் பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய தூரத்தை  9 மணி நேரம் ஓட்டுகிறார்கள்.   பழனி - திருச்செந்தூர் ரயில், நெல்லையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் என்று மாற்றப்படுகிறது. ஏற்கனவே நின்று நின்று கடுப்பில் வந்தவர்கள் திருவைகுண்டத்திலும் நிறுத்தப்பட்டபோது கடுப்பில்........... 9.30 க்கு வர வேண்டிய டிரெயின் 10.30 க்கு ஸ்டேஷன் க்கு வந்தது. அதுவும் முன்னால் சில பெட்டிகள் யாரும் இல்லாமல் காலியாக இருக்க, பின்னால் இருந்த பெட்டிகளிலே கூட்டம் இருந்தது. இதுவும் ஒருவகை குறைபாடுதான். எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் எந்த பெட்டியில் எவ்வளவு ஆட்கள் இருக்கிறார்கள்? எவ்வளவு சீட் காலியாக எந்த பெட்டியில் உள்ளது என்று ...

தில்லி அரசின் கல்வித்துறைகளில் 15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.           இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   மொத்த காலியிடங்கள்:  15054 பணி: PGT, TGT, Teacher Jobs பணியிடம்: தில்லி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:   1. Junior Engineer (Civil) - 70 2. Junior Engineer (Mechanical) -  15 3. Patwari -  140 4. Legal Assistant - 13 5. Special Educator - 1540 6. Primary Teacher - 4366 7. Special Education Teacher - 496 8. Asstt. Teacher (Nursery) - 320 9. Asstt. Teacher (Primary) - 1394 10. Physical Edn. Teacher - 919 11. Drawing Teacher - 295 12. Domestic Science Teacher - 199 13. PGT Home Science- Female: 114 14. PGT Physical Education- Male: 86 15. Post Graduate Teacher Physical Education- Fem...

CAN ANYBODY EXPLAIN THIS ADVERTISEMENT? WHY? HOW?

Image

அரசு அலுவலகங்களில் வீணாக காத்திருக்க வைக்கிறார்களா? போடலாம் கேஸை.

Image

JOB OPPORTUNITES (3 POSTS) IN KERALA STARTUP MISSION REQUIRES

Image

நெல்லை : சதக் அதுல்லா அப்பா கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் (16 எண்ணம்) தேவை

Image

அழகப்பா பல்கலைக் கழக தொலைதூரக்கல்வி ரிசல்டு வெளியீடு

Image

சென்னை TVS ல் வேலைவாய்ப்பு

Image
நேர்காணல் : நாளை நெல்லையில் இடம் : அரசு ஐ.டி.ஐ, பேட்டை

TNPSC - Department Exam May - 2017 Result Published.

http://www.tnpsc.gov.in/Resultget-may2k17.html

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் செட்டிகுளத்தில் விபத்து

Image
 23.08.2017, இடம்:செட்டிகுளம், நேரம் : மாலை 5 மணி அடிபட்ட மனிதருக்கு தலையில் படுகாயம், சுயநினைவினை இழந்திருந்தார். செட்டிகுளம் ஊருக்கு முன்னும் அதை தாண்டியும் பல வளைவுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது சாதாரணமாகிவிட்டது. நேற்றும் கூட வேகமாக சென்ற வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாடு இல்லாமல் பள்ளி டிரக்கர் தலைகீழாக கவிழ்ந்திருந்தது. இன்று அவ்வழியாக சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளத்திற்கு வந்த மனிதர் அமுதுண்ணாகுடிக்கு செல்லும் விலக்கிற்கு அடுத்த வளைவில் கட்டுப்பட்டை இழந்த வண்டி , பள்ளத்தில் உருண்டு விழுந்து,  தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்தார். அந்த ஏரியாவில் உள்ள மனிதர்தான் போலும். செட்டிகுளத்தில் பல வளைவுகள் இருந்தும், அடிக்கடி விபத்துகள் நடந்தாலும் ஒரு எச்சரிக்கை போர்டு கூட இல்லை. இது ஒரு குறைதான் ஆனால் என்னதான் எச்சரிக்கை போர்டுகள் இருந்தாலும் விழுபவர்கள் வெளிவூர்வாசிகள் அல்ல உள்ளூர்வாசிகளே. எனவே ஒவ்வொருவரின் சுயகட்டுப்பாப்பாடும் எச்சரிக்கை உணர்வும் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருளுமே காக்கும்.     நேற்றைய சம்பவம்: தினகரன் பத்திரி...

மரண சாலை : வி.வி கல்லூரி - திசையன்விளை மெயின் ரோடு (3 கி.மீ)

Image
சாத்தான்குளம் - பண்டாரபுரம் - தஞ்சை நகர் - வி.வி கல்லூரி வழியே திசையன்விளை தான் short root என்று தினமும் அவ்வழியே பல்லாயிரக்கணக்கான வண்டிகள் செல்கிறது. ஆனால் பாவம் வி.வி கல்லூரி தாண்டி ஒரு 700 - 800 மீட்டர் சென்ற உடன் ஒரு மரண ரோட்டை நாம் காண முடியும். ஒன்றல்ல இந்த மரண சாலை ஒரு மூன்று கிலோ மீட்டருக்கு தொடர்கிறது. திசையன்விளைக்கு செல்லும் மெயின் ரோட்டைப் பிடிக்கும் வரை.  ஒரு பெரிய கல்லூரி இருக்கும் இடத்திலிருந்து அப்படிப்பட்ட மரண சாலையை யாரும் எதிர்பார்க்க முடியாது. அந்த மரண சாலையில் பயணம் செய்பவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒருவராவது அந்த சாலையில் விழுந்து புரளுவர். அவ்வளவு மோசமான சாலை. ஒரு முக்கியமான ஊருக்கு செல்லும் சாலை இவ்வளவு மோசமாக இருக்க காரணம் என்ன? யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாலா? அல்லது ஏதேனும் பிரச்சனையால் வேலை நடைபெற தடை உள்ளதா?

செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.   இந்நிலையில் வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் நகல் ஓட்டுநர் உரிமம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. என்று கூறியுள்ளார்.

'தீபாவளி ட்ரீட்': மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் பாரதி ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனினை தீபாவளி தினத்தில் வெளியிட தயாராகி வருவதாகவும், இதற்கென மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   வா மற்றும் கார்பன் நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஏர்டெல் நிறுவனத்தின் புதிய முடிவு ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.1,500 விலையில் வழங்கும் 4ஜி பீச்சர் போன் திட்டத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. ஜியோபோன் பீட்டா டெஸ்டிங் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், செப்டம்பர் மாத வாக்கில் இவை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜியோ அறிவித்துள்ள இலவச மற்றும் மலிவு விலை சலுகைகளை போன்றே ஏர்டெல் நிறுவனமும் போட்டி சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவுக்கு போட்டியாக வெளியாக இருக்கும் ஏர்டெல் போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. புதி...

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017) - announcement

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017) !! Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal http://tnsetexam2017mtwu.in/index_login.php

'ஆதார்' பதியாத கார்டுகள் ரேஷன் பொருட்கள், 'கட்'

குடும்பத்தில் ஒருவரின், 'ஆதார்' விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதார் கார்டு விபரங்கள் அடிப்படையில், உணவுத்துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது.  நேற்றைய நிலவரப்படி, 56 ஆயிரத்து, 936 ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் விபரத்தையும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை. அவர்கள், 24ம் தேதிக்குள், தங்களின் ஆதார் விபரத்தை பதிவு செய்து, ரேஷன் கார்டுகளை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பதியாத ரேஷன் கார்டுகளை, உணவு வழங்கல் துறை முடக்கி வைக்க உள்ளது. இதையடுத்து, அந்த கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும்.

VARIOUS JOB OPPORTUNITIES

வேலை... வேலை... வேலை... ஆவின் நிறுவனத்தில் வேலை!! தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான 25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி மற்றும் ஈரோடு பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Manager (Marketing) - 01  (Chennai - 01) சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.5100 2. Deputy Manager (Dairying) - 03  (Chennai - 02), (Tiruvannamalai - 01) சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4400 3. Deputy Manager (Dairy Chemist) - 01  (Chennai - 01) 4. Deputy Manager (Dairy Bacteriology) - 02 (Chennai - 01), (Tiruvannamalai - 01) சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4300 5. Supervisor (Traffic) - 06  (Chennai- 06) சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4200 6...

பேய்க்குளம் பகுதியிலிருந்து சாத்தான்குளம் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற டிரக்கர் கவிழ்ந்தது

Image
மாணவர்கள் சிலருக்கு சிறிது காயம் மற்றும் கீறல்களொடு தப்பித்துக் கொண்டனர் என்றாலும் பெற்றோர்கள் உஷாராக வேண்டிய நேரம். தடுக்கி விழும் தூரத்தில் பல பள்ளிகள் வைத்துக்கொண்டு ஏன் சின்னஞ் சிறு குழந்தைகளை வதைக்கும் வண்ணம் குட்டி வண்டிகளில் மூச்சு முட்ட அனுப்ப வேண்டும்?