BUSINESS TRICKS
தொழில்முனைவோர் அறிந்த விஷயம்தான் இது. பணியாளர்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டால் தொழில் வளராது என்பது. ஆனால் இதை அறிவு பூர்வமாகப் பார்க்கும் அளவுக்கு உணர்வு பூர்வமாக உணர்வதில்லை. வேலைக்கு இருப்பவர்களை நாம் எப்படி நோக்குகிறோமோ, அவர்கள் காலப்போக்கில் அதுவாகவே மாறிவிடுவார்கள். வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதும், வேலையை வைத்து ஒருவருக்கு மரியாதை தருவதும், தராமல் இருப்பதும், வேலை கொடுப்பவர் ஆண்டவன், வேலை பார்ப்பவர் அடிமை போன்ற எண்ணங்களினால்தான் பணியாளர் பங்களிப்பில் பெரும் பங்கம் வருகிறது. ஆளுமை வளர்ச்சிக்கு என்ன செய்கிறோம்? எனக்குத் தெரிந்து பலருக்குத் தங்களிடம் வேலை செய்பவர்கள் ஒரு நல்ல சட்டை போட்டாலோ, நல்ல வண்டி வைத்திருந்தாலோ, சற்று நவ நாகரிகமாக இருந்தாலோ பிடிக்காது. தங்களைவிடத் தங்கள் பணியாளர்கள் குறைவாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை வளர்க்க விடாமல் தடுக்கிறது. பெரிய நிறுவனங்கள்கூடத் திறன் சார்ந்த அடிப்படைப் பயிற்சி தவிர ஆளுமை வளர்ச்சிக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் சிறு நிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் போன்ற அமைப்பு...