Hi Readers

...... Dear students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST 👍 ..

Thursday, 7 September 2017

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
 
மேலும், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு (3 மாதம்) தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் இலவச அழைப்ப்புகளையும் பெறலாம்.
 
இந்த இரு திட்டங்களிலும் (கேரள வட்டம் தவிர) எந்த வரையறையும் இன்றி இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேசிக்கொள்ளலாம். இலவச அழைப்பானது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
 
 

No comments:

Post a Comment