Posts

தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க!

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், எரிபொருள் சேமிப்பு குறித்து தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. மாணவர்கள் பள்ளி மூலமாகவோ அல்லது தனியாகவோ பதிவு செய்து கலந்து கொள்ளும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.  `பள்ளி மாணவர்களுக்கான இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, சிங்கப்பூர் பயணம், லேப்டாப், டேப்லெட்கள், ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறது பெட்ரோலியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு (Petroleum Conservation Research Association (PCRA)). கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சீனியர் பிரிவில் கலந்துகொண்டு தேசிய அளவில் இரண்டாவது இடம்பிடித்தவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி எமோரா மெர்சி. 15,000 ரூபாயும் லேப்டாப்பும் பரிசாகப் பெற்றார். இவரிடம் இந்தப் போட்டி குறித்துப் பேசியபோது, ``பெட்ரோலைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த கருப்பொருளை மையமாகவைத்துச் செயல்பட வேண்டும். டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும்போது வாகன இன்ஜ...

25ம் தேதி பதவி ஏற்கிறார் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்கள்

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக கடந்த 17ம் தேதி நடந்த தேர்தலில், அவர் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமாரைத் தோற்கடித்துள்ளார். வரும் 25ம் தேதி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்றுக் கொள்வார்!

எம்எல்ஏ ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன்

எ ம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார். னக்கு வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிட உள்ளதாக நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், காமராஜரின் இலவச கல்வியில் பயின்று முன்னேறிய நான் கடந்த 2006-2011-ஆம் ஆண்டு எம்எல்ஏ-வாக இருந்தபோது பெற்ற ஊதியத்தில் பல கிராமங்களில் இலவச டியூஷன் சென்டர்களை அமைத்ததோடு ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவழித்துள்ளேன்.  கடந்த முறை எம்எல்ஏ ஆகும் வாய்ப்பை இழந்தாலும் மாதந்தோறும் அந்த தொகையை செலவு செய்து இலவச டியூஷனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் செலவிட்டேன். தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் அதை ஏற்கெனவே செய்து வந்த கல்வி வளர்ச்சி திட்டத்துக்கு இரு மடங்காக செலவிடுவேன் என்று தனது அறிக்கையில் வசந்தகுமார் தெரிவித்தார்

9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை !!

# ரேங்க் முறை மாணவர்களிடையே பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது: அமைச்சர் செங்கோட்டையன் # 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்.

சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி அலுவலக கட்டடம் இந்த கல்வி ஆண்டு முதல் புதுக்கட்டிடத்தில் இயக்கம்

Image
1) பழைய ஆய்வக கட்டிடத்தில் புதுப்பொலிவுடன் இந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பழைய அலுவலக அறைகள் 2)  3)

வர வர ஜெயில் பிக்னிக் ஸ்பாட்டு மாதிரி ஆகிப் போச்சு..

Image

சட்டசபைல நீங்க என்ன வேணா கேள்வி கேளுங்க...நம்ம பதில் இது தாங்க.

Image
CPS : குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவின் அறிக்கை வந்த உடன் முடிவு 7TH PAY COMMISSION:குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவின் அறிக்கை வந்த உடன் முடிவு NEET: கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. SECOND GRADE TEACHER SALARY RELATED :குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவின் அறிக்கை வந்த உடன் முடிவு