Menu

Wednesday 28 June 2017

பேய்க்குளத்தில் மோட்டார் பழுதால் காட்சி பொருளான குடிநீர் தொட்டி 3 மாதங்களாக தொடரும் அவலம்


சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோட்டார் பழுது சரிசெய்யப்படாததால் இங்குள்ள குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிப்
படுகின்றனர். சாத்தான்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பேய்க்குளம். இங்கு விஏஓ, ஆர்ஐ அலுவலகம் அருகே ஊராட்சி சார்பில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. 


ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் இந்த தொட்டியில் ஏற்றப்பட்ட குடிநீர் அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்ததோடு அருகேயுள்ள அங்கன்வாடி மைய குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதில் இருந்த மின்மோட்டாரில் ஏற்பட்ட  பழுதால் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படுவது தடைபட்டது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் பலனில்லை என  ஊராட்சி மன்ற  முன்னாள் உறுப்பினர் சுந்தர்ராஜ் குற்றம்சாடினார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘ வருவாய்த் துறை அலுவலகம் அருகேயுள்ள குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாக மாறிவருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக மின்மோட்டாரை பழுதுபார்த்து மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி நூதன போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment