Menu

Thursday 13 July 2017

KAMARAJAR SONGS IN TAMIL - LYRICS ONLY

 பதிவிறக்கம் செய்யும் இணைப்பு பாடல்களின் இறுதியில் உள்ளது.


காமராஜர் பாடல் - 1

எனக்கென எனக்கெனவே பிறந்தது அவரே

கல்விக் கண்ணைத் திறந்தது அவரே

 

1.     மதிய உணவைத் தந்தது அவரே

சீருடையை கொடுத்ததும் அவரே

மாணவர்கள் பயில

வகை செய்ததும் அவரே                                    - எனக்கென

 

2.     ஏழைகளின் சொந்தம்

எளிமையான தோற்றம்

பழகுவதில் பாந்தம்

படிக்காத மேதை                                                  - எனக்கென

 

3.     தனக்கென வாழாது

பிறர்க்கென வாழ்ந்தவர்

தனக்கென சேர்க்காது

நமக்கென சேர்த்தவர்                                         - எனக்கென

     

4.     மூலை முடுக்கென

எல்லாம் தெரிந்தவர்

அரசியல் சாஸ்திரத்தை

கரைத்து குடித்தவர்                                             - எனக்கென

 

5.     சைக்காலஜி படிக்காமல்

மக்கள் மனதை மதித்தவர்

ஜியாக்ரபி தெரியாமல்

தமிழ்நாட்டை அறிந்தவர்                                   - எனக்கென

 

6.     எனக்கென எனக்கென பிறந்தது இவரே

கர்மவீரர் காமராஜர் தானே

எனக்கென எனக்கென பிறந்தது இவரே

பச்சைத் தமிழர் காமராஜர் தானே. 

 

காமராஜர் பாடல் -2 

 

உம்மைப் பத்தி பாடப்போறோம் காமராஜரே!

எமக்கு உம்முடைய ஆசி வேணும் காமராஜரே!

 

1.     பள்ளி போகும் நேரத்திலே

உம்மைப் பத்தி நினைக்கிறோம்

நீர் எமக்குத் தந்த எல்லா

நன்மைகளை நினைக்கிறோம்                             - உம்மை

 

2.     சாப்பிடுற நேரத்தில

உம்மைப் பத்தி நினைக்கிறோம்

நீர் எமக்குத் தந்த நல்ல

உணவை எண்ணி உண்ணுறோம்                         - உம்மை

 

3.     தேர்தல் வரும் நேரத்தில

எல்லாருமே நினைக்கிறோம்

நீர் எமக்குத் தந்த நல்ல

ஆட்சிக்குத்தான் ஏங்குறோம்                                 - உம்மை

 

4.     குமாரசாமி சிவகாமி

பெற்றேடுத்த மைந்தனே

குற்றம் குறை இல்லாத

குணசாலி குழந்தையே                                             - உம்மை 

 

 இங்கு கிளிக் செய்க

 

 காமராஜர் பாடல் -3

1.  எங்கள் தலைவர் காமராஜர்

     ஏழைகளின் பங்காளர் - 2

     நம்ம தலைவர் காமராஜர்

     நாட்டிலேயே நல்லவர்  - 2


2.     தனக்கென சேர்க்காத

         பிறர்க்கென உழைத்தவர் - 2

        பள்ளிக்கூடம் போகாமலே

        படிக்காத மேதை அவர் - 2


3.    அணைக்கட்டுகள் கட்டியே

        விவசாயத்தை பெருக்கினார் - 2

        மதிய உணவை வழங்கியே

        கல்விக்கண்ணைத் திறந்தார் - 2


4.      சீருடைகள் கொடுத்தே

        சமத்துவத்தைப் பெருக்கினார் - 2

        தன்னலத்தை மறந்தே

        தேசநலன் நாட்டினார் - 2


பாடும் முறை யூடியூபில் காண இங்கு கிளிக் செய்க


No comments:

Post a Comment