கரூர் மாணவர் உருவாக்கிய உலகின் மிகச்சிறிய செயற்கைக் கோளை நாசா அமைப்பு, விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, ஆண்டு தோறும் ‛‛க்யூப் இன் ஸ்பேஸ்'' என்ற போட்டி நடத்தகிறது. இந்த வருடம் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" என்ற அமைப்பின் உதவியுடன், தமிழகத்தின் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 18 வயதே ஆன ரிபாத் ஷரூக் என்ற மாணவர் மிகச்சிறிய சாட்டிலைட் தயாரித்தார். இதற்கு அப்துல்கலாம் நினைவாக ‛‛கலாம் சாட்'' எனபெயரிடப்பட்டது.
இதன் எடை 64 கிராம் மட்டுமே இந்த சிறிய சாட்டிலைட்டை முதன் முதலில் 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைத்தார். இந்த செயற்கை கோளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இதனை மாணவனின் குடும்பத்தினர், சக மாணவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:
Post a Comment