Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 22 June 2017

இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியாகியது

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கை நடத்துகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கை நடத்த, பேராசிரியர் இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்டு, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 53 பி.ஆர்க்., கல்லுாரிகள் தவிர, 527 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதற்கு, 1.68 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்து, 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, நேற்று முன்தினம், 'ரேண்டம்' எண் வெளியானது. இதையடுத்து, மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில், மாணவர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப கவுன்சிலிங்கில், தங்களுக்கான இடம் எப்போது கிடைக்கும். எந்த வகை கல்லுாரியில் கிடைக்கும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment