Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Saturday, 10 June 2017

வறண்ட அருவிகள் பொங்கி பிரவாகம்:திடீர் மழையால் குற்றாலத்தில் உற்சாகம்

திருநெல்வேலி:குற்றாலத்தில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு பெய்த மழையினால் அருவிகளில்அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மே மாத இறுதியில் இருந்தே சீசன் களை கட்டத்துவங்கியது. ஆனால் கடந்தமூன்று தினங்களாக மழையின்மையால் டல்லடித்தது. அனைத்து அருவிகளிலும்பாறையை ஒட்டியே தண்ணீர் விழுந்தது. நேற்று விடுமுறை தினத்தில் மெயின் அருவியில் தண்ணீர்
குறைவால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

பிற்பகல் வரையிலும் இந்த நிலைதான்நீடித்தது. மாலை 5 மணிவாக்கில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் குறிப்பாக குற்றால மலையின் உள்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் 5.30 மணிக்கு பிறகு மெயின் அருவியில்தண்ணீர் பிரவாகமாக கொட்டத்துவங்கியது. ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவியிலும்தண்ணீர் அதிக அளவில் விழுகிறது. நேற்று மாலையில் குற்றாலம் சுற்றுவட்டாரத்தில் ரம்மியமானகாற்று வீசியது. சீசன் அருமையாக இருந்தது. இதே போல மழை தொடரும்பட்சசத்தில் இன்னும் ஓரிரு தினங்களுக்கு அருவிகளில் இதே நிலை நீடிக்கும்.

No comments:

Post a Comment