Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 6 July 2017

தீயணைப்பு துறைக்கு 1,400 வீரர்கள் தேர்வு


''காலி பணியிடங்களை நிரப்ப, 1,400 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்,'' என, வடமேற்கு தீயணைப்பு துறை துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறினார்.அரக்கோணத்தில், அவர் அளித்த பேட்டி: 
தீயணைப்பு துறையில், காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, 1,400 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, விரைவில் உடற்கூறு தேர்வு நடக்க உள்ளது.வடமேற்கு மண்டலத்தில் உள்ள வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தீயணைப்பு நிலையங்களுக்கு, எட்டு புதிய வாகனங்கள், எட்டு படகுகள்வாங்கப்படும்.

தீ விபத்தில், அருகில் சென்று தீயை அணைக்கும் போது, விபத்து ஏற்படாமல் இருக்க, நவீன வசதிகளுடன் கூடிய உடைகள், முதல் கட்டமாக, 648 வாங்கப்பட்டுள்ளன.தீ விபத்து ஏற்படும் இடங்களில், மீட்பு கருவிகளை கொண்டு செல்ல, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், 'டிரக்' வாங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment