Menu

Friday 7 July 2017

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்


பள்ளிகளில் முன்பு நடைமுறையில் இருந்த 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இதையொட்டி பள்ளி கல்வியிலும் மத்திய அரசு புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் ஒரு கட்டமாக இது வரை நடைமுறையில் இருந்த 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பா ண்டேர் அகர்தலாவில் நிருபர்களிடம் கூறுகையில், 8ம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியரையும் தோல்வி அடைய செய்ய வோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது என கடந்த 2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதன் படி அனைத்து மாணவர்களும் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மத்திய அரசின் இந்த சட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்களும் இவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. எனவே கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி வழங்கும் திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

No comments:

Post a Comment