முசலைக்குளம், உதயநேரி குளங்களில் தூர்வாரும் பணி துவக்கம் (தினகரன் செய்தி)
பேய்க்குளத்தில் உள்ள முசலைக்குளம், உதயநேரி குளங்களில் டி.வி.எஸ். நிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் தூர்வாரும் பணி துவங்கியது.
இரட்டை திருப்பதி டி.வி.எஸ் நிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் ஆழ்வார்திருநகரி, வைகுண்டம், கருங்குளம் ஒன்றியங்களில் மக்களின் பங்களிப்புடன் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வந்தது. இதில் 11 குளங்களில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் வல்லக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட உதயநேரிகுளம், வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முசலைகுளம் ஆகிய குளங்களில் தூர்வாறும் பணி துவங்கியுள்ளது. இதையொட்டி நடந்த பூமி பூஜைக்கு கள இயக்குநர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர் அரவிந்தன், பிடிஓ பாண்டியராஜ், சாத்தான்குளம் தாசில்தார் ராஜிவ் தாகூர் ஜேக்கப் முன்னிலை வகித்தனர்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவர் முருகேசன், விவசாயிகள் ஜெயசிங், சுடலை, லட்சுமணதாஸ், வரதராஜன், பாலசுப்ரமணியன், முருகன் மற்றும் நிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்தி
No comments:
Post a Comment