Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Saturday, 29 July 2017

சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

''சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன்வாடி பணியாளர் (158 காலி பணியிடங்கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது ‘மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18’ என்ற முகவரியில் அணுகலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment