Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 3 July 2017

திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் கட்டாரிமங்கலம் வாலிபர் பலி

திருநெல்வேலி:நெல்லை அருகே பைக் விபத்தில் வாலிபர்கள் இருவர் பலியாயினர்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் 24,கட்டாரி மங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் 24. இருவரும் உறவினரான ஏர்வாடியில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் தங்கியிருந்து கட்டட வேலைபார்த்துவந்தனர். நேற்று பகலில் ஏர்வாடியில் இருந்து நாங்குநேரிக்கு பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேகமாக வந்தபோது, திடீரென பைக் விபத்துக்குள்ளானது. தூக்கிவீசப்பட்ட இருவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஹெல்மெட் அணியவில்லை. சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரித்தனர். 

No comments:

Post a Comment