Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Wednesday, 19 July 2017

ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு.

ரூ.309 ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசம். அதே சமயம், அதற்கான வாலிடிட்டி 28 நாட்களுக்கு பதிலாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல, ரூ.509 ரீசார்ஜ் செய்தால், அதற்கான வாலிடிட்டியும் 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபிக்கள் இலவசமாக வழங்கப்படும்.

அதே போல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.349 திட்டத்தில், 56 நாட்களுக்கு தினமும் டேட்டா வழங்கப்படுவதற்கு பதிலாக, 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும்.

அதே சமயம், ரூ.399 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும், இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள்.

போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.349 மற்றும் 399 திட்டங்கள் உள்ளன. ரூ.349 திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும். அதே போல ரூ.399 திட்டத்தில் அளவில்லா 4ஜி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment