Menu

Tuesday 4 July 2017

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு அரசு நிதியுதவி

  


'பெற்றோரை இழந்த மாணவர்கள், அரசின், ௭௫ ஆயிரம்ரூபாய் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின், தாய் அல்லது தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ, மாணவர்களுக்கு, அரசு, 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. அந்த நிதி, வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்படும். அதிலிருந்து வரும் வட்டி, மாணவரின் கல்வி மற்றும் செலவுக்காக வழங்கப்படும்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், அந்த நிதி மாணவர்களுக்கு கிடைக்கும். இதற்காக, மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், விண்ணப்பங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி பெற தகுதியுள்ள மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, உரிய வழிகாட்டுதலை பெறலாம்.

No comments:

Post a Comment