Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 27 July 2017

பேய்க்குளம் - தூத்துக்குடி அரசு பேருந்து விடும் நாள் எந்நாள்?

நம்ம ஊர் பேய்க்குளம் எவ்வளவோ வளர்ந்து விட்டது என்று நாம் நினைத்தாலும் அதற்குத் தடையாக இருப்பது நம் மாவட்ட தலைநகருக்கு பேய்க்குளத்தில் இருந்து எத்தனை அரசு பேருந்துகள் செல்கின்றன. கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் எடுக்க, வேலை வாய்ப்பு அலுவலகம், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம், ஆசிரியர் மீட்டிங்க் வைக்கும் இடம் தூத்துக்குடியில் உள்ள ஏதோ ஒரு (நகரத்திற்கு புறம்பே) கல்லூரியில் அல்லது கால்டுவெல் போன்ற பள்ளியில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தால் தேர்வு எழுத அனுமதிக்கும் இடம் தூத்துக்குடி ஊருக்குள் உள்ள பள்ளிகள் தான், தொழிற்சாலைகள், கல்லூரிகள் (மதர் தெரிசா, ஹோலி கிராஸ், வ.உ.சி,அன்னம்மாள்,காமராஜ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவைகளுக்கு எல்லாம் சரியான நேரத்தில் (மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்கு) செல்ல நம் ஊரில் இருந்து எத்தனை அரசு பேருந்துகள் உள்ளன. அந்த நேரத்திற்கு செல்ல எடுக்கப்படும் பேருந்துகளும் தூத்துக்குடியில் கொண்டு சென்று விடுவது 9.20க்குத் தான். அதன் பிறகு நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னுமொரு பேருந்தை போராடிக் கண்டு செல்வதற்குள் 10 மணியைத் தாண்டிவிடும்.இந்த அவல நிலை என்று மாறும்.
தனியார் பேருந்துகளை நம்பி வாழும் நிலை என்று மாறும். மாலை வீடு திரும்புவதை நினைத்துப் பார்த்தால் கண்ணீர் வந்து விடும். திருநெல்வேலி சுற்றி அல்லது திருச்செந்தூர் சுற்றி வர ....அப்பப்பா....நம்ம மாவட்ட தலைநகர பார்க்க பக்கத்து மாவட்ட தலைநகர சுற்றி பார்க்கனும்னு நேர்ச்சையா என்ன?

இரண்டு வழிகளில் அரசு பேருந்துகளை இயக்கினால் நலம், திருவைகுண்டம் வழி மற்றும் ஏரல் - முக்காணி வழி என்று இயக்கினால் அது நலம் மற்றும் நம்ம ஊருக்கு கௌரவமாக இருக்கும்.





No comments:

Post a Comment