Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 31 July 2017

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு


பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விழுக்காடு, அரை விழுக்காடு குறைந்துள்ளது.
1 கோடி ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கான வட்டியை 4 விழுக்காட்டில் இருந்து 3.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்திருப்பவர்கள்.
தொடர்ந்து வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி வந்த நிலையில் வட்டி விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 சேமிப்பு கணக்கு வட்டி விகித குறைப்பை அடுத்து கடன்களுக்கான வட்டி விழுக்காடும் விரைவில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டார்களிடம் உருவாகி உள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை உயர ஆரம்பித்துள்ளது. சேமிப்பு கணக்குளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு 4 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்றே அமல்படுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது

No comments:

Post a Comment