Menu

Saturday 8 July 2017

‘நோ ஃபுட் வேஸ்ட்’ திட்டத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கல்

திருமணம் மற்றும் இதர விழாக்களில் சமைத்து மீதமாகும் உணவைப் பெற்று, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து வருகிறது ‘நோ ஃபுட் வேஸ்ட்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் ஏழை மக்கள் பயனடையும் வகையில், ‘நோ ஃபுட் வேஸ்ட்’ திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. ஈஸ்வரமூர்த்தி தாய்-சேய் நல விடுதியில் நடந்த தொடக்க விழாவில், மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் பங்கேற்றார்.

அவர் பேசும்போது, “பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் இத்திட் டத்தை தனியார் அமைப்பினர் தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குடிசை வாழ் மக்கள், மாவட்ட தலைமை மருத்துவமனை, முதியோர் இல்லம், அனாதை இல்லம், சாலையோரத் தில் வசிக்கும் மக்களின் பசியை போக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், விசேஷ வீடுகள், பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தேவைக்கு மீறி மிச்சமாகும் உணவு தொடர்பாக 9087790877 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், அந்தந்த முகவரிக்கே வந்து உணவை சேகரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவார்கள்” என்றார்.
முதல் நாளான நேற்று 70 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு தேவைப்படுவோரின் நிலை கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக் கும் பகுதியில் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாநகரப் பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் தமிழ்செல்வன், மாநகர் நல அலுவலர் பூபதி, ‘நோ ஃபுட் வேஸ்ட்’ நிறுவனர் பத்மநாபன், துணை நிறுவனர் சுதாகர் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment