Menu

Saturday 29 July 2017

சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் சாவு மற்றொரு மாணவர் படுகாயம்

சாத்தான்குளம், 
சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐ.டி.ஐ. மாணவர்கள்
சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரியைச் சேர்ந்தவர் நம்பி. விவசாயி. இவருடைய மகன் பரமசிவன் (வயது 20). சாத்தான்குளம் தவசியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பழனி. டிரைவர். இவருடைய மகன் ரமேஷ் (19). பரமசிவன், ரமேஷ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2–ம் ஆண்டு படித்து வந்தனர்.
நேற்று காலையில் இவர்கள் 2 பேரும் வழக்கம்போல் ஒரு மோட்டார் சைக்கிளில் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ரமேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
மாணவர் சாவு
சாத்தான்குளம்– நாசரேத் ரோட்டில் ஆறுகண் பாலத்தை கடந்து சென்றபோது, சாலையோரம் உள்ள தடுப்பு கல்லின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு ரோட்டில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அந்த 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவருக்கு சிகிச்சை
பலத்த காயம் அடைந்த ரமேசை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 comments:

  1. Palam kavu vanga arambijitu.inta payana patrken tdta school a padijan .enaku munthuna setnu nenaikan

    ReplyDelete
  2. Palam kavu vanga arambijitu.inta payana patrken tdta school a padijan .enaku munthuna setnu nenaikan

    ReplyDelete