Menu

Friday 7 July 2017

பேய்க்குளம் - சாலைப்புதூர் சாலையை சீரமைக்கக் கோரி கண்ணீர் அஞ்சலி போராட்டம்


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பேய்க்குளம் - சாலைப்புதூர் சாலையை சீரமைக்க கோரி கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.


                                                                                                                           பேய்க்குளம் முதல் சாலைப்புதூர் ஆசீர்வாதபுரம் சாலை வழியாக சாலைப்புதூர், ஆசீர்வாதபுரம் ஆகிய ஊர்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள், மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ மையத்திற்கு செல்பவர்கள், கூட்டுறவு வங்கிக்கு செல்பவர்கள், வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு செல்பவர்கள் மற்றும் குருகால்பேரி, மீரான்குளம், பெருமாள்குளம், சிந்தாமணி ஊர்களுக்கு செல்பவர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பேய்க்குளம் முதல் சாலைப்புதூர் ஆசீர்வாதபுரம் வரை உள்ள சாலையானது பல வருடங்களாக பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனை சரி செய்து இருவழிச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. 




மேற்படி சாலையை சீரமைக்க வேண்டுமென கோரி கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடைபெற இருந்த நிலையில், சாத்தான்குளம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் புதிய சாலை அமைக்கபடும் என்று உறுதிமொழி வழங்கியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகும் பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கபடாத காரணத்தினால், இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அந்தோணி ராஜா சிங் தலைமையில் சாத்தை வட்டார விவசாய பிரிவு காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகிக்க பேய்க்குளம் - சாலைப்புதுர் சாலையில், சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி பஞ்சாயத்து செயலாளர் குணசேகரன், ஆட்டோ ஒட்டுநர் சங்க செயலாளர் பிச்சை முத்து டேவிட், பெருமாள்குளம் சீனிவாசன், சாலைப்புதூர் பெஞ்சமின், சுதாகர், செல்வம், சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் யுதா காந்தி ஜெப செல்வன் நன்றி கூறினார்.

தினகரன் செய்தி


சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் இருந்து சாலைபுதூர் செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காமல் குண்டும், குழியுமாக காட்சி தருவதை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று சாலைக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடந்தது. 



சாத்தான்குளம் தாலுகா ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஓன்றியத்துக்கு உள்பட்ட பேய்க்குளத்தில் இருந்து சாலைப்புதூர், ஆசீர்வாதபுரம் செல்லும் சாலை உள்ளது. சாலைப்புதூர், ஆசீர்வாதபுரம் பகுதியில் இரண்டு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பெட்ரோல் பங்க், கோயில்கள் உள்ளன. இச்சாலை வழியாக பள்ளி மாணவ மாணவிகள், மருத்துவமனை, கூட்டுறவு கடன் சங்கம், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவோர், குருகால்பேரி, மீரான்குளம், பெருமாள்குளம், சிந்தாமணி ஊர்களுக்கும் இருசக்கர வாகனம் மற்றும் இதர வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர். 



இதில் பேய்க்குளம் முதல் சாலைப்புதூர், ஆசீர்வாதபுரம் வரை உள்ள சாலை சுமார் 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி
களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர்  கிழே தவறி விழுந்து பாதிக்கப்பட்டு வந்தனர். 



இந்நிலையில் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வைகுண்டம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அந்தோணிராஜாசிங் தலைமையில் நேற்று சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் வடிக்கும் நூதன போராட்டம் நடந்தது. சாத்தான்குளம் வட்டார விவசாய பிரிவு காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மெத்தன போக்கில் செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 



சமக ஊராட்சி செயலாளர் குணசேகரன், பிச்சை முத்துடேவிட், பெருமாள்குளம் சீனிவாசன், பெஞ்சமின், சுதாகர், செல்வம், சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வைகுண்டம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் யுதாகாந்திஜெபசெல்வன் நன்றி கூறினார்.

தினமணி நாளிதழும் இச்செய்தியை பிரசுரித்துள்ளது.

No comments:

Post a Comment