Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Sunday, 2 July 2017

வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது


சென்னையில், சமையல்காஸ் சிலிண்டர் விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை உடைய, 

சமையல் 'காஸ்' சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது.
அதன்படி, சென்னையில் ஜூனில், 559.50 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு சிலிண்டர் விலை, தற்போது, 14.50 ரூபாய் உயர்ந்து, 574 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 71.50 ரூபாய் குறைந்து, 1,103 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டு சிலிண்டருக்கு, கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி கிடையாது; வணிக சிலிண்டருக்கு கலால் வரி, 8 சதவீதம்; மதிப்பு கூட்டு வரி, 14 சதவீதம் என மொத்தம், 22.5 சதவீதம் வரி இருந்தது. 
ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரியில் வீட்டு சிலிண்டருக்கு, 5 சதவீதம்; வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்ததால், வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது; வணிக சிலிண்டர் விலை குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment