Menu

Thursday 6 July 2017

பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல் பயணத்துளிகள்

இந்தியா - இஸ்ரேல் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வதை எச்சரிக்கையுடன் நோக்கும் பாகிஸ்தான் ஊடகங்கள்

இந்திய பிரதமர் மோதி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மற்றும் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்திய பிரதமர் மோதி இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மற்றும் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்வது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

தொலைக்காட்சிகளில் சில செய்திகள் மற்றும் ஆய்வாளர்கள், மோதி பயணத்தின் காரணமாக ஏற்படும் என கருதப்படும் பிராந்திய தாக்கங்கள் குறித்து விவாதித்தனர்.

'அரசுகளின் மற்ற தலைவர்களின் இரு தரப்பு பயணங்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக கருத்து ஏதும் தெரிவிப்பதில்லை. எனினும் இந்த பயணம் பிராந்தியத்தின் கேந்திர ஸ்திரத்தன்மையில் தீவிரமான தாக்கங்கள் ஏற்படுத்தும் என கூறப்பட்டதிலிருந்து ,மோடியின் பயணத்தை பாகிஸ்தான் நெருக்கமாக பின் தொடர்ந்து வருவதாக' பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான 'தெ எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' சுட்டிக் காட்டியுள்ளது.

`இஸ்ரேலுடனான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவு காரணமாக இந்தியா சிறப்பாக பயனடைந்துள்ளதாக` பாதுகாப்பு நிபுணரும், ஓய்வு பெற்ற லெப்டினல் ஜெனரலுமான அம்ஜத் சோயிப் தெரிவித்ததாக `எக்ஸ்பிரஸ் டிரிபியூன்` நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

`அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்பை இஸ்ரேல் வாயிலாக இந்தியா பெற்றுள்ளது.` என அவர் கூறியுள்ளார்.

இதே கருத்தை பிரதிபலிப்பது போல , `இந்தியா-இஸ்ரேலுக்கு இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தெற்காசியப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு தொந்தரவாக இருக்கும்.` என சர்வதேச உறவுகள் குறித்த ஆய்வாளரான டாக்டர் ஜாபர் நவாஸ் ஜஸ்பால் அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

``இஸ்ரேலின் உதவி இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தை மேலும் மேம்படுத்தக்கூடும். அவ்வாறு நடப்பது என்பது,பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிரான நம்பகமான தாக்குதல் தடுக்கும் திறனை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை குலைக்கும்``, என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானின் முக்கிய பத்திரிக்கையாளராக கருதப்படும் கம்ரான் கான், உருது தொலைக்காட்சியான துன்யாவில் நடத்திய , ஒரு நிகழ்ச்சியில், `பாகிஸ்தானில் நிலையற்ற அரசியல் தன்மை இருக்கும் போது , இந்திய பிரதமர் மாபெரும் ராஜதந்திர நகர்வுகளை செய்து வருகிறார்.` என தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஒழிப்பு, வேளாண்மை, நீர் மேலாண்மை உட்பட இந்தியா - இஸ்ரேல் இடையே 7 ஒப்பந்தம்: பிரதமர் மோடி, நெதன்யாகு முன்னிலையில் கையெழுத்து


இந்தியா இஸ்ரேல் இடையே, தீவிரவாத ஒழிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, நீர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின.
இந்தியா, இஸ்ரேல் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூதரக உறவு நீடிக்கிறது. ஆனால் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பிரச்சினை காரணமாக இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் சென்றது இல்லை.
இந்நிலையில், முதல்முறை யாக பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றார். அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூத்த அமைச்சர்கள் டெல் அவிவ் விமான நிலையத்துக்கே நேரில் சென்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடிக்கு, ஜெருசலே மில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேற்று அதிகார பூர்வமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படு வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட 7 முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை பலப் படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இருவரும் செய்தியாளர் களுக்கு கூட்டாக பேட்டி யளித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள உறவை பலப் படுத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இரு நாட்டுக்கும் பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு துறைகளில் ஏற்கெனவே உள்ள ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
அதிகரித்து வரும் மத அடிப் படைவாதமும் தீவிரவாதமும் சர்வதேச அளவில் மட்டுமல் லாது இரு நாடுகளின் பிராந்திய அமைதிக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்த்துப் போரிடுவதில் தீவிரமாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
மேலும் தீவிரவாத அமைப்பு களுக்கு புகலிடம் வழங்குவோர் (பாகிஸ்தான்) மீதும் அவற்றுக்கு நிதியுதவி செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, “மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல் மிகவும் மோசமானது. எனவே, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது” என்றார்.
சிறுவனை சந்தித்தார் மோடி

மும்பை தாக்குதலில் உயிர் தப்பிய இஸ்ரேல் சிறுவன் மோஷி ஹால்ட்ஸ்பெர்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது அந்த சிறுவனை ஆரத் தழுவினார். அப்போது மோஷி கூறும்போது, “டியர் திரு மோடி, நான் உங்களையும் உங்கள் நாட்டு மக்களையும் நேசிக்கிறேன்” என்றார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பையில் உள்ள முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதில் மோஷியின் பெற்றோர் ரிவ்கா மற்றும் காவ்ரியேல் ஹால்ட்ஸ்பெர்க் உள்ளிட்ட 8 பேர் பலியாயினர்.
இந்தத் தாக்குதலின்போது இந்திய பெண் சான்ட்ரா சாமு வேல்ஸ், உயிரை பணயம் வைத்து 2 வயது குழந்தையாக இருந்த மோஷியை காப்பாற்றினார். இதையடுத்து, மோஷி இஸ்ரே லில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, இப்போது 11 வயதாகும் சிறுவன் மோஷி, அவனது தாத்தா, பாட்டி மற்றும் சான்ட்ரா சாமுவேல்ஸ் ஆகியோரை நேற்று சந்தித்தார்.
முன்னதாக, இதுகுறித்து மோஷியின் தாத்தா ஷிமோன் கூறும்போது, “மோஷியை பிரதமர் மோடி பார்க்க விரும்புவ தாக கூறியபோது, என்னால் நம்ப முடியவில்லை. அப்போது இந்தியா எங்களை மறக்க வில்லை, மோஷியின் 13-வது வயதில் ‘பார் மிதாவ்’ நிகழ்ச்சியை (உபநயனா) மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் கலந்து கொள்ள மோடியை அழைப்பேன் என்றார் ஷிமோன்.

இஸ்ரேல் பிரதமருக்கு மோடி அளித்த நினைவுப் பரிசு


பிரதமர் மோடி இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வழங்கினார்.
இந்தியாவிலுள்ள நீண்ட யூத வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பரிசு குறித்து பிரதமர் அலுவக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை.
இதில் முதல் காப்பர் தகடு யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் வழங்கப்பட்டது.
இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்து விளக்குகிறது.
இந்த தகடுகள் கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தத் தகடுகளுடன் கேரளாவிலுள்ள யூத சமூகத்தைச் சேர்ந்த பழமையான தோரா சுருளையும் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மலருக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது


இஸ்ரேல் நாட்டில் வளரும் மலர் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு முதன்முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தந்ததையொட்டி இஸ்ரேலில் சமீப காலமாக பெருமளவில் வளரும் மலரினத்துக்கு மோடியின் பெயரை சூட்டியுள்ளனர்.
'இஸ்ரேலி கிரைசாந்தமம்' என்ற மலர் இனி மோடி என அழைக்கப்படும் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் நாட்டின் ட்விட்டர் பக்கத்தில் #GrowingPartnership! என்ற ஹேஷ்டேகின் கீழ் அரசுத் தரப்பில் பகிர்ந்திருந்தனர்.
முன்னதாக பிரதமர் மோடி, டேன்சிங்கர் மலர் பண்ணைக்குச் சென்றார். அங்கு அவர் மலர் சாகுபடியில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
டான்சிங்கர் மலர் பண்ணைக்கு மோடி வருகை தந்ததை நினைவுகூரும் வகையிலேயே இஸ்ரேல் மலருக்கு மோடி பெயர் சூட்டப்பட்டதாக பிஐபி தகவல் வெளியிட்டுள்ளது.

மோடி தங்க இஸ்ரேல் ஒதுக்கிய பாதுகாப்பான அறை: வெடிகுண்டு, விஷவாயு தாக்குதலில் சேதமடையாது

உலகின் மிகவும் பாதுகாப்பு மிக்க அறை ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து இந்த ஓட்டலின் செயல் இயக்குநர் ஷெல்டன் ரிட்ஸ் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கு ஒதுக்கப்பட்ட அறை வெடிகுண்டு தாக்குதல், ரசாயன தாக்குல் உள்ளிட்ட எவ்வித தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டது. வெடிகுண்டு தாக்குதலில் இந்த ஓட்டல் முழுவதும் சேதமடைந்தாலும் மோடிக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
மோடி மற்றும் அவருடன் வந்துள்ள அதிகாரிகள் தங்கு வதற்காக, இங்குள்ள 110 அறை களில் ஏற்கெனவே தங்கியிருந்தவர் களை வெளியேற்றி விட்டோம். இங்கு ஏற்கெனவே வருகை புரிந்த அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோர் இங்குதான் தங்கினர். 3 வாரத்துக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இங்குதான் தங்கினார்.
சைவ உணவு பழக்கம் கொண்ட மோடிக்காக, முட்டை இல்லாத, சர்க்கரை இல்லாத உணவு வகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக அவருக்கு குஜராத்தி உணவு வகைகள் பிடிக்கும் என்பதால், அதை தயாரிப்பதற்கு ஏதுவாக இந்தய சமையலர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிபருடன் சந்திப்பு
இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெல் அவிவ் நகரில் அந்நாட்டு அதிபர் ரூவென் ரிவ்லினை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு இஸ்ரேல் தொழில்நுட்பம் எந்த வகையில் உதவும் என்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மரபுகளை மீறி அதிபர் என்னை வரவேற்றார். இது இந்திய மக்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதையைக் குறிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “இந்தியர்கள் மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். எனது காலஞ்சென்ற மாமா இஸ்ரேல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கணித பேராசிரியராக பணியாற்றியவர். அவர் இந்திய கணித மேதையான ராமானுஜர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக என்னிடம் அடிக்கடி கூறுவார். பல நூற்றாண்டாக ராமானுஜர் சிறந்த கணித மேதையாக திகழ்கிறார். இந்தியர்களின் திறமைக்கு சின்னமாக அவர் விளங்குகிறார்” என்றார்.
2,000 ஆண்டு உறவு:

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இஸ்ரேலில் அளிக்கப்பட்ட வரவேற்பினை என்னால் மறக்க முடியாது. இனி இந்திய - இஸ்ரேல் உறவு புதிய உச்சத்தை எட்டும். இந்தியா-இஸ்ரேல் இடையே இரண்டாயிரம் ஆண்டு உறவு இருக்கிறது. இரு நாட்டு பண்டிகைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. யூத சமுதாய மக்களின் நம்பிக்கைக்கு இந்திய கலாசாரத்தில் பங்குள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு யூத மக்களின் பங்கு பெரியது.

2,000 ஆண்டு உறவு: பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இஸ்ரேலில் அளிக்கப்பட்ட வரவேற்பினை என்னால் மறக்க முடியாது. இனி இந்திய - இஸ்ரேல் உறவு புதிய உச்சத்தை எட்டும். இந்தியா-இஸ்ரேல் இடையே இரண்டாயிரம் ஆண்டு உறவு இருக்கிறது. இரு நாட்டு பண்டிகைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. யூத சமுதாய மக்களின் நம்பிக்கைக்கு இந்திய கலாசாரத்தில் பங்குள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு யூத மக்களின் பங்கு பெரியது.

இஸ்ரேலியர்கள் மனதை ஈர்த்த மோடி

இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று இந்திய வம்சாவளியினரிடையே பேசினார். அனைத்து தரப்பு வயதுடைய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
மிகுந்த உற்சாகத்துடன் கைகளை அசைத்தும், மோடி...மோடி என கூச்சலிட்டும் மோடியை அவர்கள் வரவேற்றனர். மோடியின் உரைக்கு பிறகு கருத்து தெரிவித்த, டான் ராசெல் என்ற பெண், இந்தியாவில் யூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. நாங்கள் ஒரே குடும்பமாக வசிக்கறோம் என்றார். பெனி இஸ்ரேஸ் சமூகத்தைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இருந்து இஸ்ரேலில் குடியேறியவர்.
மேலும் அவர் கூறுகையில், மோடி இந்தியர்களை போல் இஸ்ரேல் மக்களையும் மதிக்கிறார். இஸ்ரேல் வந்த முதல் இந்திய பிரதமரும் இவர் தான். அவர் உண்மையான மனிதர். அதனால் தான் அவரை பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றார்.
1956 ல் கொச்சியில் இருந்து ஜெருசலேமில் குடியேறிய ஜிபி தாகன், மோடியை காண்பது மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனது தந்தையின் இறப்பிற்கு பிறகு இந்தியாவுடனான தொடர்பு இல்லாமல் இஸ்ரேல் பெண்ணாக இருந்து வந்தேன். ஆனால் மோடியின் இஸ்ரேல் வருகையால் இந்தியாவுடன் எனது உறவை திருப்பி தந்துள்ளது. 6 வயதில் இந்தியாவிலிருந்து வந்தேன். தற்போது மீண்டும் இந்தியாவிற்கு செல்ல விரும்புகிறேன் என்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோசப் மோசஸ் கூறுகையில், மோடியின் பேச்சு இஸ்ரேலுடனான உறவை பலப்படுத்தி உள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. யூதர் குறித்து ஆய்வு செய்து வரும் யாபா யாகோவ் கூறுகையில், மோடியின் வருகை யூத இனத்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது . மோடியை பற்றி இஸ்ரேல் மக்களும் நன்றாக அறிந்து கொள்ளும் வாயப்பை இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சி மூலம் தந்துள்ளனர் என்றார்.இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று இந்திய வம்சாவளியினரிடையே பேசினார். அனைத்து தரப்பு வயதுடைய ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்துகொண்டனர். மிகுந்த உற்சாகத்துடன் கைகளை அசைத்தும், மோடி...மோடி என கூச்சலிட்டும் மோடியை அவர்கள் வரவேற்றனர். மோடியின் உரைக்கு பிறகு கருத்து தெரிவித்த, டான் ராசெல் என்ற பெண், இந்தியாவில் யூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. நாங்கள் ஒரே குடும்பமாக வசிக்கறோம் என்றார். பெனி இஸ்ரேஸ் சமூகத்தைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் இருந்து இஸ்ரேலில் குடியேறியவர். மேலும் அவர் கூறுகையில், மோடி இந்தியர்களை போல் இஸ்ரேல் மக்களையும் மதிக்கிறார். இஸ்ரேல் வந்த முதல் இந்திய பிரதமரும் இவர் தான். அவர் உண்மையான மனிதர். அதனால் தான் அவரை பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றார். 1956 ல் கொச்சியில் இருந்து ஜெருசலேமில் குடியேறிய ஜிபி தாகன், மோடியை காண்பது மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனது தந்தையின் இறப்பிற்கு பிறகு இந்தியாவுடனான தொடர்பு இல்லாமல் இஸ்ரேல் பெண்ணாக இருந்து வந்தேன். ஆனால் மோடியின் இஸ்ரேல் வருகையால் இந்தியாவுடன் எனது உறவை திருப்பி தந்துள்ளது. 6 வயதில் இந்தியாவிலிருந்து வந்தேன். தற்போது மீண்டும் இந்தியாவிற்கு செல்ல விரும்புகிறேன் என்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோசப் மோசஸ் கூறுகையில், மோடியின் பேச்சு இஸ்ரேலுடனான உறவை பலப்படுத்தி உள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. யூதர் குறித்து ஆய்வு செய்து வரும் யாபா யாகோவ் கூறுகையில், மோடியின் வருகை யூத இனத்தவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது . மோடியை பற்றி இஸ்ரேல் மக்களும் நன்றாக அறிந்து கொள்ளும் வாயப்பை இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சி மூலம் தந்துள்ளனர் என்றார்.

இஸ்ரேலில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் பெஞ்சமின் விமான நிலையத்துக்கு நேரில் வந்தார்

இந்தியாவை நேசிக்கிறோம்
விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, பெஞ்சமின் நெதன்யாகு ஆரத் தழுவி வரவேற் றார். அப்போது நெதன்யாகு கூறியபோது, “கடந்த 70 ஆண்டுகளாக இந்திய பிரதமரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தோம். நீங்கள் (மோடி) இப்போது இஸ்ரேலில் கால் பதித்து வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். இந்தியாவையும் அதன் கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகத்தையும் நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, இஸ்ரே லுடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார்.
விமான நிலையத்தில் இருந்து பெய்ட் டாகன் என்ற இடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பூந்தோட்ட பண்ணைக்கு இரு பிரதமர்களும் சென்றனர். அங்கு இஸ்ரேலின் மலர் சாகுபடி தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் ஜெருசலேம் நகரில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலுக்கு மோடி சென்றார்.
சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு, நாஜி ஆட்சிக் காலத்தில் கொல்லப் பட்ட யூதர்களுக்காக மேற்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்துக்கு சென்றார். அவருடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் சென்றார். அங்கு இருவரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஜெருசலேமில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவின் இல்லத்தில் அளிக்கப் பட்ட இரவு விருந்தில் மோடி பங்கேற்றார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விவ காரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்திய வீரர்களுக்கு அஞ்சலி
முதலாம் உலகப்போரின்போது உயிரிழந்த இந்திய வீரர்களின் கல்லறை ஹைபா நகரில் உள்ளது. அங்கு நாளை செல்லும் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் டெல் அவிவ் செல்லும் அவர் இஸ்ரேல் நிறுவனங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளைப் பார்வையிடுகிறார்.
அன்று மாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புறப்படுகிறார்.

No comments:

Post a Comment