Menu

Saturday 29 July 2017

COMPARISON BETWEEN வாட்ஸ்ஆப் AND மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்



வாட்ஸ்ஆப் இல்லாத வசதி : 

கைசாலா ஆப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்சில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.

கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும்.

புரோ கைசாலா என்ற மற்றோரு ஆப்ஸ் மாதத்திற்கு ரூ.130 என்ற கட்டணத்தில் தொழில்துறை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment