Menu

Wednesday 26 July 2017

கிண்டி ITI-யில் சேர விண்ணப்பிக்கலாம்.


கிண்டி ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டமாக வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்பப் பயிற்சிகளுக்குwww.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 14 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்கள் 14 வயது முதல் வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் அரசு உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்படும். மேலும், அரசின் இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மிதிவண்டி, இலவச பஸ் பாஸ் ஆகியனவும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற துணை இயக்குனர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment