Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 3 July 2017

சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் (TRUST) தேர்வில் சாதனை

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் வருடந்தோறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்துவது வழக்கம். கடந்த வருடம் நடந்த தேர்விற்கான ரிசல்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கர் த/பெ ராமலிங்கம் மற்றும் சுரேஷ் பிரவீன் த/பெ மரிய பிரபாகரன் இருவரும் தலா 79 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வருடந்தோறும் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment