Hi Readers

...... Dear +2 students .....அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்....

Thursday, 3 August 2017

கிராம வங்கிகளில் 15,332 காலியிடங்களுக்கு நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி



நெல்லை : நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள 56 கிராம வங்கிகளில் காலியாக உள்ள அலுவலர், மேலாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 15 ஆயிரத்து 332 பணியிடங்களுக்கு வருகிற செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்லவன் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகளில் 590 காலி பணியிடங்கள் உள்ளன. இந்தத் தேர்வுக்கு ஆக.14ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு மையம் போன்ற விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தேர்வுக்கு நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.4ம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் இணையதள நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதி சான்று நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2 ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment