புதுடெல்லி: 30 சதவகிதத்துக்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல்
கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் குறைவாக
சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப
கவுன்சில்(ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது
என்று அதன் தலைவர் அனில் டி.சாஸ்ரபுத்தே தகவல்
தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மூட முடிவு செய்துள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அபராத தொகை
குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள
10,361 பொறியியல் கல்லூரிகளில் 27லட்சம் காலியிடங்கள் உள்ளது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment