Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Tuesday, 22 August 2017

'தீபாவளி ட்ரீட்': மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் பாரதி ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனினை தீபாவளி தினத்தில் வெளியிட தயாராகி வருவதாகவும்,
இதற்கென மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
வா மற்றும் கார்பன் நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய முடிவு ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.1,500 விலையில் வழங்கும் 4ஜி பீச்சர் போன் திட்டத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. ஜியோபோன் பீட்டா டெஸ்டிங் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், செப்டம்பர் மாத வாக்கில் இவை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜியோ அறிவித்துள்ள இலவச மற்றும் மலிவு விலை சலுகைகளை போன்றே ஏர்டெல் நிறுவனமும் போட்டி சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவுக்கு போட்டியாக வெளியாக இருக்கும் ஏர்டெல் போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. புதிய ஏர்டெல் போன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலை டேட்டா சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment