தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரிக்கும் அன்னம்மாள் கல்லூரிக்கும் இடையே அமைந்துள்ள இந்த தமிழ்நாடு ஓட்டல் வெரைட்டிக்கு பேர் போன ஓட்டல். தூத்துக்குடியில் 50ரூபாயில் மனநிறைவாக சாப்பிட உகந்த இடம்.
ருசியில் ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் வெரைட்டி அள்ளும். 50ரூபாய்க்கு நீங்கள் சாம்பார், மீன் குழம்பு, இரத்தப்பொறியல், வறுத்த மீன் -1 மற்றும் பல வகையான அப்பளங்கள், கொத்தவரைக்காய் வறுவல் என்று பல வெரைட்டிகள் புன்முறுவலோடு , சாப்பாடு வேண்டுமா? வேண்டுமா? என்று கேட்டு வைப்பார்கள். வேண்டாம் என்றால் , என்ன ஸார் சாப்பிடுறீங்க? நல்லா சாப்பிடுங்க. என்று சொல்லி வைப்பார்கள். பெரிய பெரிய ஓட்டல்களில் அடுத்த முறை சாப்பாடு கேட்டுவிடக் கூடாது என்று சாம்பாரில் கண்டதையும் கலந்து வயிறை அடைத்து அனுப்பும் வேளையில் விருந்தோம்பலுக்கு பேர் பெற்ற இடம். அந்த பக்கம் போனா மிஸ் பண்ணிறாதீங்க. ஒரு முறை போய்தான் பாருங்களேன். எதிர்த்தாப்புல இருந்த கடை எல்லாம் இந்த ஓட்டல்கிட்ட போட்டி போட முடியாம கடையை மூட்டிட்டு போயிட்டாங்க. விருந்தோம்பல் பண்புக்காகவே போகலாம்.
No comments:
Post a Comment