மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தின் துணை அமைப்பான
எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் அச்சமின்றி
வாழத்தகுந்த 140 நகரங்களை கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது.
நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி
மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் உலக அளவில் மக்களிடம் கேட்கப்பட்ட
கேள்விகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரம் முதலிடத்தையும், ஆஸ்திரியாவின்
வியன்னா மற்றும் கனடாவின் வேன்கூவர் ஆகிய நகரங்கள் இரண்டாவது இடத்தையும்
பிடித்துள்ளன. பாகிஸ்தானின் கராச்சி 134வது இடத்திலும், வங்கதேசத்தின்
டாக்கா 137வது இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள்
காரணமாக, அந்நாடுகளில் உள்ள நகரங்கள் மக்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல.
மேலும், ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்டவை மக்கள்
அமைதியாக, நிம்மதியாக வாழவே முடியாத நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத
தாக்குதல்கள் நடக்கின்றன.
உலகளவில் தீவிரவாதம் அதிகரித்து வருவதை இந்த கணக்கெடுப்பு சுட்டிக்
காட்டுகிறது. உலகில் அமைதியாக மக்கள் வாழும் இடங்கள், கடந்த 5 ஆண்டுகளில்
0.8 சதவிகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment