Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Wednesday, 2 August 2017

இனம் தெரியாத இந்த மனிதரின் சேவையை பாராட்டுங்களே.

இன்று அந்த நடிகர் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டார். இவர்கள் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டார் என்று ஷேர் செய்து பாராட்டுகிறோம். ஆனால் அப்படி நடப்பட்ட மரக்கன்றுகளில் பல தண்ணீர் ஊற்றுவார் இல்லாமால் பட்டுபோய் அந்த நடிகருக்கு பெயர் மட்டும் தந்து விட்டு காணாமல் போய்விடுகிறது. அடுத்த வருடமும் மரக்கன்றினை நட இடம் தேடும்போது அதே இடத்தில் நட்டு வைக்கிறார்கள். இப்படி நடப்பட்ட மரக்கன்றுகள் வீணாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இங்கு ஒரு மனிதர் செய்கின்ற காரியங்களைப் பாருங்கள். 








இருப்பது 10 மரக்கன்றுகளாக இருந்தாலும் அவை எல்லாமே நிச்சயமாக முளைப்பதற்கு, மழைக்காலம் வரை உறுதியாக நிற்பதற்கு இப்படிப்பட்ட ஒரு செட் அப்பை செய்து தினமும் மாலை வேளையில் பைக்கில் அந்த பக்கம் வரும்போது அந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை ஊற்றுகிறார். அந்த பாட்டில்களில் அவர் சொட்டு நீர்ப்பாசனத்திற்கு வைத்தாற்போல் கண்ட்ரோல் செய்யும் அமைப்பும் உள்ளது. அந்த தண்ணீர் பல மணி நேரம் சொட்டு சொட்டாக அந்த செடிக்கு உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த இனம் தெரியாத மனிதருக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்.

No comments:

Post a Comment