Menu

Thursday 31 August 2017

நாளை முதல் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் விநியோகம்

ரேசன் கடைகளில் நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அதாவது ஸ்மார்ட் கார்டு பெற்றவர்களுக்கு, கார்டு மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல மற்றும் தாலுகா அலுவலகங்கள் மூலம், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஸ்மார்ட் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கம் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நாளை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஸ்மார்ட் பெற்றவர்களுக்கு, அதன் மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment