சாத்தான்குளம் வட்டார கபடி வீரர்கள் தேர்வு

சாத்தான்குளம்:தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஜூனியர் பிரிவு கபடி வீரர்கள் தேர்வு aசெய்யும் நிகழ்ச்சி சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.  இதில் சாத்தான்குளம் யூனியன் அளவிலான கபடி அணி வீரர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தேர்வு செய்யும் பணியை மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் மகாபால்துரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் அனைவரும் கபடி விளையாடினர். இதில் 14 கபடி அணி வீரர்கள் தேர்வு செய்தனர்.  
 
வீரர்களை சாத்தான்குளம் வட்டார அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் சாமுவேல் பொன்னையா, முத்தரசன் ஆகியோர் தேர்வு செய்தனர். 
 
பொத்தகாலன்விளை உடற்கல்வி ஆசிரியர் நெல்சன் சத்தியராஜ், ஜெயபால், ஆண்ட்ரூஸ் அண்ணாதுரை, மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
இதையடுத்து ஜூனியர் பிரிவு கபடி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வட்டார அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

SSLC 100 ONE WORD

Thoothukudi dt Quarterly SSLC ANSWER KEY 2025