திருநெல்வேலி, பேட்டை ராணிஅண்ணா மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி ஸ்ரீபதிதங்கம். இந்த ஆண்டுக்கான சிறந்த இளைஞர் விருதினை நேற்றுமுன்தினம் சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பெற்றார்.அவருக்கு சுதந்திர தினவிழாவில் தங்கபதக்கமும், 50 ஆயிரம்ரூபாய் பரிசும் வழங்கப்பட்டன. நேற்று கல்லூரிக்கு வந்த அவரை கல்லூரியில் சக மாணவிகள், முதல்வர் மைதிலி, பேராசிரியை சொர்ணலதா, என்.என்.எஸ்.,ஒருங்கிணைப்பாளர் கற்பகவல்லி உள்ளிட்டோர் பாராட்டினர்.
மாணவி ஸ்ரீபதிதங்கம், நெல்லை மாவட்டம்
வீரவநல்லூரை சேர்ந்தவர். தந்தை உலகநாதன் எலட்ரிஷியன் தொழில் செய்கிறார். தாயார் மல்லிகா காலமாகிவிட்டார். அண்ணன் சத்தியபிரகாஷ், தங்கை வசந்தமல்லி ஆகியோருடன்
வசிக்கிறார். கல்லூரியில் முதலாம் ஆண்டில் இருந்தே ஸ்ரீபதிதங்கம்,
என்.எஸ்.எஸ்.,மாணவர் அமைப்பில் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மருத்துவ முகாம்கள், தாமிரபரணியில் தூய்மைப்பணி, கிராமங்களில்
தங்கியிருந்து சேவைப்பணி, இமாசல்பிரதேசம் உள்ளிட்ட இரண்டு முறை நடந்த தேசிய
முகாம்களில் பங்கெடுப்பது என சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment