கலெக்டருக்கு தபால் போடுங்க..!மாணவிகளுக்கு விழிப்புணர்வு திட்டம்
திருநெல்வேலி:நெல்லையில் பள்ளி மாணவிகளிடையே பால்ய திருமணம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கலெக்டர் தபால் அட்டை திட்டத்தை
துவக்கிவைத்தார்.தமிழகத்தில் பால்ய விவாகத்திற்கு தடை இருந்தபோதிலும், 18
வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்குதிருமணம் செய்துவைப்பது தொடர்ந்து
நடந்துவருகிறது. எனவே தமிழ்நாடு சமூகநலத்துறையின்சார்பில் அதனை
தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.நெல்லையில்
காந்திமதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு
நிகழ்ச்சியில்400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தபால்அட்டைகளை கலெக்டர்
சந்தீப் நந்தூரி வழங்கினார்.கலெக்டரின் முகவரியிட்ட அந்த தபால் அட்டையில்
மாணவிகள் தங்கள் பகுதியில் இத்தகைய பால்யதிருமணம் நடப்பது குறித்து
அறிந்தாலோ அல்லது மாணவிகளுக்கு பள்ளியிலோ, வீடுகளிலோ, பஸ்சிலோ,பழகும்
இடங்களில் பிரச்னைகள் இருந்தால் அதனை எழுதி அனுப்புமாறு
கேட்டுக்கொண்டார்.கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், தமிழகத்தில்
முதன்முதலில் கடலூர் மாவட்டத்தில் துவக்கப்பட்டஇந்த திட்டம் சிறந்த
பலனையளித்தது என்றார்.
No comments:
Post a Comment