Menu

Monday 14 August 2017

வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியர்கள் வாக்களிக்கும் வசதி : ஆன்லைனில் இதுவரை ஒரு தமிழ்நாட்டினர் கூட பதியவில்லை

வௌிநாடுகளில் வாழும் இந்தியர்களில் 24 ஆயிரம் பேர் மட்டுமே,  தேர்தல் நேரத்தில் ஓட்டளிக்க தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை அதிகமாக அளவில் ஈர்த்து தேர்தலில் பங்கேற்று, ஓட்டளிக்க செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்காக, ஆன்-லைன் போர்டல் ஒன்றை உருவாக்கி, அதில் பதிவுசெய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் eci.nic.in என்ற இணையதளத்தில் சென்று வௌிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை பதிவு செய்யலாம்

இந்த வலைதளத்தில் செல்லும் இந்தியர்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கான விடைகளை படித்து தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்கின்றனர். இதுவரை இந்த விதமான இலக்கு நிர்ணயிக்கப்படாத நிலையில், 24 ஆயிரத்து 348 வௌிநாட்டு இந்தியர்கள் வாக்காளர்களா பதிவு செய்துள்ளனர்.

இதில் கேரள மாநிலத்தில் இருந்து 23 ஆயிரத்து 556 பேரும், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 364 பேரும், குஜராத் மாநிலத்தில் இருந்து 14 பேரும் பதிவுசெய்துள்ளனர்.

வௌிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான இந்த வலைதளம் குறித்து கூறப்படுவதாவது-
இந்தியாவில் பிறந்த ஒருவர், தற்போது வௌி நாடுகளில் வசித்து, அந்த நாட்டின் குடியுரிமை  பெறாமல் இருப்பவர் இந்த தளத்தில் தன்னை பதிவு செய்யலாம். இந்த நபர்கள் இந்தியாவில் தங்கள் சொந்த மாநிலத்தில், உள்ள அவர்களுக்கான தொகுதியில் ஓட்டளிக்க தகுதியானவர்கள். அவ்வாறு பதிவு செய்யும் போது, உண்மையான பாஸ்போர்ட் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் ஒரு வௌிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்துவிட்டால், தேர்தல் நேரத்தில் ஓட்டளிப்பது குறித்த முறைகள் , விஷயங்கள் தொடர்பாக வாக்காளர் உள்ள நாட்டுக்கு இந்தியா தெரிவிக்கும்.
வௌிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வரும்போது, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது. அதற்கு பதிலாக,  வாக்காளர் வசிக்கும் நாட்டில், நகரில் வாக்களிக்க செல்லும் போது, தன்னுடைய அசல் போஸ்போர்ட்டைகாண்பித்து வாக்களிக்கலாம்.
தேர்தல் நேரத்தில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வழக்கமாக வாக்களிப்பார்கள்.வௌி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் பணத்தை செலவு செய்து யாரும் இந்தியாவில் வந்து வாக்களிக்க விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர்க்கும் வகையில் வௌிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், தேர்தல் நேரத்தில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி தரும் பொருட்டு, கடந்த 2-ந்தேதிஅதற்கான திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment