நெட் தேர்வு அறிவிப்பு | இந்திய விஞ்ஞான - தொழிற்சாலைகள்ஆராய்ச்சி
கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச்
பெல்லோ-ஜே.ஆர்.எப்.) மற்றும் லெச்சரஸ்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வை
அறிவித்து உள்ளது.
தற்போது 2017-ம் ஆண்டுக்கான 2-வது என்.இ.டி. தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், பி.எஸ்.- எம்.எஸ். மருத்துவ படிப்புகள், பி.இ, பி.டெக் மற்றும் பி.பார்மா/ எம்.பி.பி.எஸ். படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
எஸ்.சி,எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள்50 சதவீத
மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. ஜூனியர்ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான
(என்.இ.டி.) தேர்வு எழுத விரும்புபவர்கள் 1-7-2017 தேதியில் 28 வயதுக்கு
உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு
அனுமதிக்கப்படுகிறது.
விரிவுரையாளருக்கான என்.இ.டி. தேர்வு
எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. பொதுப்பிரிவினர் ரூ.1000-ம்,
ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும்
ஊனமுற்றோர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஹார்டு காபி நகல் 23-9-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.csirhrdgdg.res.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment