Hi Readers

...... Dear students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST 👍 ..

Saturday, 9 September 2017

நெட்: விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி


கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும்.
 
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிவாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.நிகழாண்டுக்கான 'நெட்' தேர்வு நவம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு சி.பி.எஸ்.இ. இணையதளம் மூலம்ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே ஆதார் வைத்திருப்பவர்கள் ஆன்-லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளளாம்.

No comments:

Post a Comment