அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 ஆசிரியர்களைத் தேர்வு
செய்வதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடக்கிறது. அதற்கான
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பல்தொழில்நுட்பக் கல்லுரி
(பாலிடெக்னிக்) விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை
செப்டம்பர் 16-ம் தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. மொத்தம்
1,058 விரிவுரையாளர்களைத் தேர்வு செய்வதற்கான இத்தேர்வு எழுத 1,70,363
பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டை
(hall ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.nic.in)
பதிவேற்றம் செய்துள்ளது.
விண்ணபித்த தேர்வர்கள் அவர்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை
உள்ளீடு செய்து, தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வுக்கூட
நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேரப்
பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே
வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள், முன்னதாகவே தங்களுக்குரிய
நுழைவுச்சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று
அறிவித்துள்ளார்கள். மேலும், நுழைவுச் சீட்டில் புகைப்படம் இல்லை என்றால்
அதற்கான விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் போடப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்பம் (http://trb.tn.nic.in/POL2017/31082017/Annexure8.pdf )
மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment