Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Sunday, 10 September 2017

ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டி ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் எண் இணைப்பு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஆதார், கடைசியாக இறப்பை பதிவு செய்வதற்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு மொபைல் பயன்படுத்துவதாலும், சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று லோக்நிதி என்ற தன்னார்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டுகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, வருகின்ற பிப்வரி 18-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்காத மொபைல் எண் செயலிழப்பு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புபடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment