Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 11 September 2017

சாத்தான்குளம், திசையன்விளையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது: 7 பைக்குகள் பறிமுதல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 பைக்குகளை மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்,  தட்டார்மடம், நெல்லை மாவட்டம்,  திசையன்விளை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை வீதியில்  நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மர்ம கும்பலால் திருடப்பட்டன. இதுதொடர்பாக  பாதிக்கப்பட்டவர்கள் சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை போலீசில் புகார் கொடுத்தனர்.

 அதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தட்டார்மடம் பயிற்சி  எஸ்ஐ ஜெயராஜ் தலைமையில் போலீசார் தட்டார்மடம், சாத்தான்குளம்  பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாத்தான்குளத்தில்  சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் திசையன்விளை மகாதேவன்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன்  கிருஷ்ணன் (21) என்பதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து மேற்கண்ட பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில்  கூட்டாளிகளான திசையன்விளையைச் சேர்ந்த  மீனாட்சிசுந்தரம் மகன் துரைராஜ் (23), கீரைக்காரன்தட்டு பகுதியைச் சேர்ந்த அரிராமன்  மகன் திவாகர் (22), மகாதேவன்குளத்தைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம் மகன் தனசிங்  (25), பொன் பாண்டி மகன் இசக்கிகாளி (23) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பைக்களை  மீட்டனர். கைதான 5 பேரிடமும்  சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment