Menu

Sunday, 8 May 2022

அன்னையர் தினம் வந்தது ஆராலே?

                                                                     ANNA JARVIS

 

    மாதா, பிதா, குரு, தெய்வம்- இதில் எப்போதும் முதல் இடம் அம்மாவுக்குத் தான். அம்மா இடத்தினை வேறு எவரும் கவரக்கூடுமோ?

அந்த தாயினைப் போற்றும் வண்ணம் ஒவ்வொரு தினமும் இருக்க வேண்டும். இருப்பினும் மே மாதம் 8 அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

எப்பவும் போல இந்த வருடமும் அன்னையர் தினம் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். அந்த அன்னையர் தினம் எப்படி , யாராலே வந்தது என்று அறிந்து கொள்ள வேண்டுமா?

வாசியுங்கள்…தொடர்ந்து,

`அனா ஜார்விஸ்` என்ற சமூக சேவகி அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அபோது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை. யுத்தத்தில் உயிர்ழந்த ஏராளமான வீரர்களின் குடுமங்கள் தடுமாறி சீரழிந்தன. இவர்களை ஒன்று சேர்க்கவும், சமாதானம் செய்யவும் அவர் கடுமையாக அதே நேரம் சோர்வடையாமலும் போராடினார்.

            ஆனால் சோகத்தைப் பாருங்கள். அவரது மகள் ரீவ்ஸ் ஜார்விஸ் பார்வைத்திறன் இல்லாதவர். அந்த துன்பத்தையும் தன்க்குள் அடக்கிக் கொண்டு தனது இறுதிக்காலம் வரை சமூக சேவையில் ஈடுபட்டு 1904 ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

            இதன்பின் 1908ல் அவரது மகள் ரீவ்ஸ் ஜார்வீஸ் தனது தாய் அனா ஜார்வீஸ் நினைவாக தேவாலயத்தில், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஒரு சிறப்பு வழிபாட்டை நடத்தினார். அதன் பின் 1913 ல் பென்சில்வேனியாவில் குடியேறி சமூக சேவை செய்யலானார்.

            தனது அன்னை மட்டுமல்ல, அனைத்து அன்னையரையும் போற்ற வேண்டும் என்ற தன் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்.

இவரது வேண்டுகோளை ஏற்று, 1913ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அதிகாரப் பூர்வமாக அன்னையர் தினமாக அப்போதிருந்த அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதை 80க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டது.

தற்போது சமூக வலைத்தள உபயோக அதிகரிப்பால் அன்னையர் தினம் பிரபலம் அடையத் துவங்கியுள்ளது.

தினம் தினம் கொண்டாட வேண்டிய பண்டிகை – அன்னையர் தினம். அந்த ஒரு நாளில் மட்டுமல்ல.

No comments:

Post a Comment