Hi Readers

...... Dear SSLC students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST FOR SCIENCE & SOCIAL SCIENCE EXAMS ..

Saturday, 14 May 2022

மாணவன் எழுதிய ஒரு இராணுவ வீரரின் மன்னிப்புக் கடிதம்

 டெல்லியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை மனு குலாட்டி தனது மாணவர்களிடம், கற்பனையான ஒரு சூழ்நிலைக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் ஒன்று எழுதி வர வேண்டி இருந்தார். அதில் ஒரு மாணவன் எழுதிய மன்னிப்புக்கடிதம் இன்று தேசம் முழுவதையும் வியாபித்து பரவியுள்ளது. அதில் அந்த மாணவன் எழுதிய சூழ்நிலை என்னவெனில் ஒரு இராணுவ வீரன் தனது தாய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார். தேசம் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதால் தன்னால் தனது தங்கை திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது என்று மன்னிப்புக் கேட்பது போல் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. என்னே அந்த மாணவனின் கற்பனை! சிறுவயதிலே அந்த மாணவனிடம் உள்ள தேசப்பற்றும், இராணுவ வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் பண்பும் இன்று தேசம் முழுவதும் பேசுபொருளாக உள்ளது.

அந்த கடிதம் இப்படி உள்ளது.

அதாவது `நமது எல்லை அபாயகரமான சூழலில் உள்ளது. எனவே என்னால் திருமணத்திற்கு வர இயலவில்லை. என்னை நீங்கள் மன்னித்துவிடுங்கள். எல்லையில் நிலவும் சூழல் காரணமாக என்னால் விடுப்பு பெறவும் முடியவில்லை. என்னால் தங்கையின் திருமணத்தை பார்க்கவும் முடியவில்லை. நான் மீண்டும் எப்போது தங்கையைப் பார்ப்பேன் என்றும் தெரியவில்லை. இப்போதைக்கு எனது கடமைதான் எனக்கு முக்கியம். நான் வராததற்கு தயவுகூர்ந்து மன்னியுங்கள்.` என எழுதி உள்ளார். இந்த உருக்கமான கடிதம் அந்த ஆசிரியரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட அது அனைவரின் பாராட்டையிம் பெற்று வைரலாகி உள்ளது. உண்மையிலே சிறு வயதிலே இப்படிப்பட்ட தேசப்பற்று உள்ள குழந்தைகள் தான் நமது தேசத்தின் பலம்.


No comments:

Post a Comment