Menu

Thursday, 26 May 2022

ஆசிர்வாதபுரம் விலக்கில் வேகத்தடை வைக்கப்பட மக்கள் கோரிக்கை

 பேய்க்குளம் அருகே உள்ள ஆசிர்வாதபுரத்தில் Transformer பக்கத்தில் வாரம்தோறும் சிறிய அளவில் ஒரு விபத்து நடைபெறுகிறது. 


இரண்டு தினங்கள் முன்பு கூட பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒன்றும் முதன்முறையாக நடைபெறவில்லை. அதற்கு முன்பும் மீரான்குளத்தில் இருந்து வந்த இருசக்கர வாகனமும் , பெருமாள்குளம் சாலையில் இருந்து வந்த இருசக்கர வாகனமும் மோத முதியவர் ஒருவர் தெய்வாதீனமாக தப்பினார். இப்படி எழுதிக் கொண்டே போகலாம். அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இது வாடிக்கை ஆகிவிட்டது. எனவே. இந்த சாலையின் மூன்று புறங்களிலும் வேகத்தடை அமைப்பது அவசியம். 



மேலும் இதில் ஒரு மணல்வழித்தடம் ஒன்றும் உள்ளது. அந்த தடத்தில் இருந்து வருவோரும் எதிர்பாரா தருணத்தில் மேலே சாலையில் ஏறுவதால் சாலையில் வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த ஏரியாவில் இரு மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. அந்த பள்ளிகளுக்கு தினமும் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிதிவண்டியில் வந்து செல்கின்றனர். பேய்க்குளம் இந்த எரியா மக்களுக்கு ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக உள்ளது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஒரு பெட்ரோல் பல்க் உள்ளது. 3 திருமண மண்டபங்கள் உள்ளது. அது மட்டும் அல்லாமல் புதன் கிழமை தோறும் பெருமாள்குளத்தில் சந்தை கூடும். தற்போது திருநெல்வேலிக்கு செல்வதற்கு பெரும்பாலான மக்களால் இந்த பாதையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையில் தினமும் 5000 முதல் 10000 வாகனங்கள் பயணிக்கின்றன. 



அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் நாம் குறிப்பிட்ட இந்த இடத்தில் வேகத்தடை அமைவது அவசியம். சீக்கிரமாக அமைத்தால் நலம். அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை.



No comments:

Post a Comment