Menu

Tuesday 10 May 2022

கோவில்பட்டி வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு

 இந்தோனேஷியாவில் வரும் 23 துவங்கி ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. அப்போட்டியில் பங்கேற்க கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் (21) மற்றும் கார்த்தி -20 (அரியலூர்) ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் மாரீஸ்வரன் சக்திவேல் அவர்களின் தந்தை சக்திவேல் மற்றும் தாய் சங்கரி தீப்பெட்டி தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயின்றவர்கள். இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர் திரு முத்துக்குமார் அவர்கள் பயிற்சி அளித்தார். 



ஆசிய ஹாக்கி போட்டிக்கான தேர்வு முகாம் கடந்த 2 மாதங்களாக பெங்களூர் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியா முழுவதிலும் இருந்து 46 பேர் பங்கேற்றனர்.  இறுதி தேர்வு பட்டியலில் 18 பேர் இடம்பெற்றனர். அந்த 18 பேரில் இடம் பெற்ற இரு தமிழர்கள் இவர்கள். கோவில்பட்டியை சேர்ந்த நிறைய வீரர்கள் ஹாக்கி விளையாட்டில் சாத்னை படைத்துள்ளனர். மேலும் விளையாட்டின் மூலம் காவல் துறை, இராணுவம் , வங்கி, துறைமுகம் , மின்சார வாரியம், ரெயில்வே போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர். 

இருவரின் வெற்றியை கோவில்பட்டியே கொண்டாடி வருகிறது. மாரீஸ்வரன், கார்த்தின் இருவரும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதை இலட்சியமாக கூறி உள்ளனர். அவரகள் இலட்சியம் நிறைவேற நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மட்டுமின்றி பின்வரும் அநேக ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக சாதிக்கட்டும்.



No comments:

Post a Comment