திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு செ.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊராக சென்று மக்களைச் சந்தித்து நன்றி செலுத்தி மக்களின் குறைகளைக் கேட்டும் பல இடங்களில் பல நற்பணிகளைத் துவங்கி வைத்தும் வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று சாத்தான்குளம் தாலுகாவைச் சார்ந்த மீரான்குளம், பெருமாள்குளம் மற்றும் சாலைப்புதூர் கிராமங்களில் மக்களைச் சந்தித்தார். அவருக்கு ஊர்ப்பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தனிப்பட்ட முறையிலும் ஊர்ப் பொதுவாகவும் மக்கள் குறைகள் தீர்க்குமாறு மனுக்கள் அளித்தனர். பொதுமக்கள் சார்பாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தருமாறு மனு வழங்கப்பட்டது.
உயர்திரு செ.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் ஊர் ஊராக மக்களைச் சந்தித்து நன்றி கூறி, குறைகள் கேட்கும் இந்த பழக்கமானது பல மக்களைக் கவர்ந்து உள்ளது.
நமது சார்பாக திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு செ.ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.
1. தாமிரபரணி ஆற்று நீர் திருவைகுண்டம் பகுதியில் செழிப்பினை உண்டு பண்ணுகிறது. அந்த ஆற்று நீர் மணிமுத்தாறு கால்வாயுடன் இணைக்கப்பட்டால் பேய்க்குளம் பகுதியில் விவசாயம் விளங்கும்.
2. Srivenkateswarapuram ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் Srivenkateswarapuram ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும்.
3. Srivenkateswarapuram ல் ஒரு அரசு தொழில்நுட்ப கல்லூரி துவங்கினால் இப்பகுதி மக்களின் கல்வி நிலை மேலும் மேம்படும். 12ஆம் வகுப்பு வரை பயின்று அதன் பின் படிப்பினை தொடர முடியா குழந்தைகளின் அவல நிலை மாறும்.
4. Srivenkateswarapuram - சாலைப்புதூர் சாலை குறுகலாக உள்ளது. எனவே இந்த சாலையின் இருபுறமும் மண் போட்டு தளம் சாலைக்கு இணையாக உயர்த்தப்பட்டால் அடிக்கடி நடக்கும் சிறு விபத்துகள் தவிர்க்கப்படும்.
இப்படிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானால் ஐயா அவர்களின் புகழ் நீடூழி நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment