Menu

Tuesday 10 May 2022

Who is behind Teddy bear?

 Teddy என்னும் பெயர் பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் அவர்களுடன் இணைந்து கூறப்படுகிறது. ஒரு முறை அவர் தமது நண்பர்களுடன் இணைந்து வேட்டைக்குச் செல்கிறார். அவருடன் சென்றவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு  விலங்கினை கொன்று விட்டார்கள். ஆனால் பாவம் நம்ம குடியரசுத் தலைவருக்கு மட்டும் ஏதும் சிக்கவில்லை. கடைசியில் போராடி அவருடன் வந்த அதிகாரி ஒருவர் ஒரு கரடி ஒன்றினை கஷ்டப்பட்டு கயிறு கட்டி இழுத்து வருகிறார். நண்பர்கள் அவரிடம் அந்த கரடியை ரூஸ்வெல்ட் சுட்டு தான் கொன்றதைப் போல் போஸ் கொடுக்க சொல்கின்றனர்.


 ஆனால் கடைசி வரை ரூஸ்வெல்ட் அது sportsmenship அல்ல என்று மறுத்து விட்டார். பின்னாளில் அது மிகப்பிரபலமான அரசியல் கார்ட்டூன் ஆகிறது. 


இந்த கார்ட்டூனை பார்த்த மோரிஸ் மிக்டாம் என்பவர் மனதில் ஒரு சிந்தனை தோன்றியது. ஒரு சிறிய கரடி பொம்மை ஒன்றை செய்து , Teddy 🧸 என்று பெயரிட்டு ரூஸ்வெல்ட் அவர்களுக்கு அனுப்பி அவ்வாறு அவர் பெயரில் பொம்மை செய்ய அனுமதி பெற்றார். இதுவே Teady bear பொம்மை தோன்றிய பின்புலம்.


No comments:

Post a Comment