Menu

Sunday 5 June 2022

கொம்மடிக்கோட்டை SN அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் கூடுகை


 தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் அருகில் உள்ள கொம்மடிக்கோட்டையில் உள்ளது. சந்தோஷ் நாடார் அரசு மாதிரிப் பள்ளி உள்ளது. அங்கு இன்று (05.06.22) 1964 முதல் 2020 வரை இப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் கூடுகை இன்று மிக மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்றைய தினம் காலை முதலே பள்ளி விழாக்கோலம் பூண்டது. பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தோடு வருகை புரிந்தனர். நீண்ட நாள் கழித்து நண்பர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது உற்சாகமும் மகிழ்ச்சியும் கரை புரண்டு ஒடும் வெள்ளம் போல் ஓடியது. நெடு நாள் கழித்து தங்கள் ஆசிரிய, ஆசிரியர்களைக் காணும் போது சந்தோஷத்தில் நா தடுமாறியது. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் எவ்வளவு பெரியது என்று மீண்டும் நிரூபனமானது.



அதேபோல நிகழ்ச்சியும் மிக மிக வித்தியாசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரையும் வரவேற்கும் வண்ணம் பதநீர், நுங்கு தரப்பட்டது. 80s kids ன் பிரியமான உணவு, தீனிப்பண்டங்கள் அத்தனையும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. சேமியா ஐஸிலிருந்து கல்கோனா மிட்டாய் வரை அனைத்து மிட்டாய்களும் அடுக்கப்பட்டு இருந்தது. சுத்து மிட்டாய் போன்றவற்றை சுற்றி தங்கள் குழந்தைப் பருவத்திற்கே பெரியவர்கள் சென்று வந்தனர். 



விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் உற்சாகமாய் சிறு குழந்தைகள் போல போட்டிகளில் கலந்து கொண்டனர். அதேபோல இதற்கு முன் வாட்ஸ் அப் குழுவில் அவ்வப்போது நடத்தப்பட்ட புதிர் போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 



பின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் திரு. G.முருகானந்தம் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. தர்மேந்திராஜ் வாழ்த்துரை வழங்கினார். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் P.K பவுலோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆதவா அறக்கட்டளை திரு. பாலக்குமரேசன் சிறப்புரை வழங்கினார். பள்ளியின் இந்நாள் தமிழ் ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். பழைய மாணவர்கள் கூட்டமைப்பு இணை ஒருங்கினைப்பாளர் திரு.ஹாமில்டன் வெல்சன் நன்றியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெற்றோர் ஆசிரியர் கழக திரு. மாணிக்க வாசகம் அவர்களும்  , சந்தோச நாடார் அவர்கள் பேரன் திரு. S.S.K சிவானந்தபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கப்பட்ட நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. 

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட அனைத்து பழைய மாணவர்களுக்கும் தாங்களும் இப்படி ஒரு பழைய மாணவர் கூடுகை நிகழ்த்த வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் இந்த நிகழ்ச்சியை ஒருஙகினைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 










































No comments:

Post a Comment